போலி ஆவணம் மூலம் விற்கப்பட்ட ரூ.15 லட்சம் நிலம் மீட்பு


போலி ஆவணம் மூலம் விற்கப்பட்ட ரூ.15 லட்சம் நிலம் மீட்பு
x

ராதாபுரம் அருகே போலி ஆவணம் மூலம் விற்கப்பட்ட ரூ.15 லட்சம் நிலம் மீட்கப்பட்டது.

திருநெல்வேலி

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அஞ்சுகிராமத்தை சேர்ந்தவர் தேவி. இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 7 சென்ட் இடம் நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே லெவிஞ்சிபுரம் பகுதியில் உள்ளது. இந்த இடத்தை சிலர் போலி ஆவணம் மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் நிலத்தை மீட்டு தரக்கோரி தேவி மனு அளித்து இருந்தார். அந்த மனு மீது விசாரணை நடத்த நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டார். அதன்பேரில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயபால் பர்னபாஸ் மேற்பார்வையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி ரூ.15 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மீட்டனர். அதற்கான ஆவணங்களை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தனது அலுவலகத்தில் வைத்து நில உரிமையாளரான தேவியிடம் வழங்கினார். மேலும் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.


Next Story