உளுந்தை ஊராட்சியில் ரூ.1 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு; வருவாய்த்துறையினர் நடவடிக்கை


உளுந்தை ஊராட்சியில் ரூ.1 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு; வருவாய்த்துறையினர் நடவடிக்கை
x

உளுந்தை ஊராட்சியில் ரூ.1 கோடி ஆக்கிரமிப்பு நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர்.

திருவள்ளூர்

கலெக்டரிடம் புகார்

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட உளுந்தை ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. அந்த நிலத்தை மீட்டு தர கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு புகார் அளித்தனர்.

நிலம் மீட்பு

இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் திருவள்ளூர் தாசில்தார் மதியழகன் தலைமையில், உளுந்தை ஊராட்சி மன்ற தலைவரும், கடம்பத்தூர் ஒன்றிய தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவருமான உளுந்தை எம்.கே.ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) விஜய், சர்வேயர் நித்யா, கிராம நிர்வாக உதவியாளர் செல்வராஜ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உளுந்தை ஊராட்சியில் கால்நடை அரசு ஆஸ்பத்திரி அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை அளவீடு செய்து பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் சமன் செய்து மீட்டனர்.

இதை தொடர்ந்து திருவள்ளூர் தாசில்தார் மதியழகன் மற்றும் உளுந்தை ஊராட்சி மன்ற தலைவரும், கடம்பத்தூர் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவருமான உளுந்தை எம்.கே. ரமேஷ் ஆகியோர் மீட்கப்பட்ட நிலத்தை 4 இருளர்கள் குடும்பத்தினருக்கு வீட்டுமனைகளாக பயன்படுத்திக் கொள்ள வழங்கினார்கள்.


Next Story