சென்னையில் சோழர் கால சிலைகள் மீட்பு - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை


சென்னையில் சோழர் கால சிலைகள் மீட்பு - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை
x

சென்னை அருகே அருங்காட்சிகத்தில் இருந்த சோழர் கால சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டனர்.

சென்னை,

சென்னை கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் பழங்கால சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு சோழர் காலத்தைச் சேர்ந்த 2 வெண்கல சிலைகள் இருந்தது தெரிய வந்தது. அந்த சிலைகளை தஞ்சாவூரைச் சேர்ந்த மாசிலாமணி என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு நன்கொடையாக வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மாசிலாமணியை தொடர்பு கொண்ட போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததாக கூறப்பட்டுகிறது. தொடர்ந்து மாசிலாமணி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து 15-க்கும் மேற்பட்ட சிலைகளை மீட்டனர்.


Next Story