நீலகிரியில் வரலாறு காணாத வெப்பம்; கோடை விழாவை ரத்து செய்ய கோரிக்கை


நீலகிரியில் வரலாறு காணாத வெப்பம்; கோடை விழாவை ரத்து செய்ய கோரிக்கை
x

நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெப்பத்தை இயற்கை பேரிடராக கருதி கோடை விழாவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

நீலகிரி,

கோடைக் காலங்களில் வெயிலின் தாக்கத்தை தணிக்க நீலகிரி உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு பொதுமக்கள் படையெடுப்பது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்க, மே மாதத்தில் நீலகிரியில் கோடை விழாக்கள் நடத்தப்படுகின்றன.

தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடத்தப்படும் இந்தக் கோடை விழாக்களில் பங்கேற்க உலகின் பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். ஆனால் இந்த முறை நீலகிரியில் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வெப்பம் பதிவாகியுள்ளதால், ஏரிகள் வறண்டு, குன்னூர், உதகை உள்பட அனைத்து பகுதிகளிலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர், கழிப்பிடம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதையும் செய்யவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் கோடை விழாவை நடத்துவது பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்றும், வெப்பத்தை இயற்கை பேரிடராக கருதி கோடை விழாவை ரத்து செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




Next Story