பகல் நேரத்திலும் ஆம்னி பஸ்களை இயக்க தயார்: உரிமையாளர்கள் அறிவிப்பு


பகல் நேரத்திலும் ஆம்னி பஸ்களை இயக்க தயார்: உரிமையாளர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Jan 2024 5:16 AM IST (Updated: 10 Jan 2024 5:59 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்துக்குள் தினசரி 2 ஆயிரத்து 800 ஆம்னி பஸ்கள் 3 ஆயிரத்து 600 சேவைகள் அளித்து வருகிறது. இதில் 80 சதவீத ஆம்னி பஸ்கள் இரவு நேரங்களில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

தமிழகத்துக்குள் தினசரி 2 ஆயிரத்து 800 ஆம்னி பஸ்கள் 3 ஆயிரத்து 600 சேவைகள் அளித்து வருகிறது. இதில் 80 சதவீத ஆம்னி பஸ்கள் இரவு நேரங்களில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. வார இறுதி நாட்கள் மற்றும் விழா காலங்களில் தேவைக்கு ஏற்றார் போல் அதிகமான சேவைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது அரசு போக்குவரத்து கழகங்களில் வேலை நிறுத்தத்தில் ஒரு சில தொழிற்சங்கங்கள் ஈடுபட்டு வருகிறது. இதனால் பயணிகள் பாதிக்க கூடாது என்ற நல் எண்ணத்தில் அரசு கோரிக்கை வைத்தால் பயணிகளின் நலன் கருதி இரவு நேரங்களில் மட்டுமே இயக்கப்படும் எங்களது ஆம்னி பஸ்களை பகல் நேரங்களில் குறைந்தபட்சம் 50 முதல் 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நகரங்களுக்கு பயணிகளை ஏற்றி செல்ல தயாராக இருக்கிறோம். ஏற்கனவே இதற்கு முன்பு 15 நாட்கள் வரை நடந்த வேலைநிறுத்தத்தின் போது ஆம்னி பஸ்கள் பயணிகளுக்கு அரசு உத்தரவை ஏற்று சிறப்பான சேவையை அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது என்று அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அ.அன்பழகன் தெரிவித்து உள்ளார்.


Next Story