இடைநின்ற குழந்தைகள் பள்ளியில் மீண்டும் சேர்ப்பு


இடைநின்ற குழந்தைகள் பள்ளியில் மீண்டும் சேர்ப்பு
x

இடைநின்ற குழந்தைகள் பள்ளியில் மீண்டும் சேர்க்கப்பட்டனர்.

திருச்சி

திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் அறிவுரையின் பேரில் பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்க்கும் பணியில் தொட்டியம் வட்டாரக் கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தொட்டியம் அருகே அரங்கூர் கிராமத்தில் தொடக்க கல்வி முடித்து உயர் தொடக்க கல்வியை தொடராமல் இடைநின்ற மாணவி பிரியதர்ஷினி அரங்கூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். இதேபோல் உயர்தொடக்க கல்வியை தொடராமல் இடைநின்ற முள்ளிப்பாடி கிராமத்தைச் சேர்ந்த நிதின் என்ற மாணவர் அலகரை அரசு உயர்நிலைப் பள்ளியிலும், தொட்டியம் பகுதியைச் சார்ந்த விஜய், தோளூர்பட்டியைச் சேர்ந்த ஜெயப்பிரியா ஆகியோர் பாலசமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், சஞ்சீவி புரத்தைச் சேர்ந்த தேவகி உடையாகுளம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் சேர்க்கப்பட்டனர். இச்சேர்க்கையின் போது அரங்கூர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகர் பிரியதர்ஷினிக்கு இலவச பாடப்புத்தகம், புத்தக பை, பாடக்குறிபேடுகளை வழங்கினார். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வநாயகி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story