ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

பொது வினியோக திட்டத்துக்கு தனித்துறை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, 2-வது நாளாக ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொருளாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். முன்னாள் பொறுப்பாளர்கள் பழனிவேல், சுரேஷ் கண்ணன், சீத்தாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் மகேந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர். பொது வினியோக திட்டத்துக்கு தனித்துறை உருவாக்க வேண்டும். நிறுத்திவைக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும்.தரமற்ற பொருள்களுக்காக நியாய விலைக்கடை பணியாளர்களை பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும். மாத கடைசி தேதியில் ஊதியம் வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதியை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். ஓய்வு பெற்ற நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் 368 ரேஷன் கடைகளை அடைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தினர். முடிவில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்லமுத்து நன்றி கூறினார்.


Next Story