கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை கலெக்டர் தொடங்கி வைத்தார்


கடலூர் அரசு ஆஸ்பத்திரியில்  ரேஷன் கடை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை  கலெக்டர் தொடங்கி வைத்தார்
x

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனையை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

கடலூர்


கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் ரேஷன் கடை பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று ரேஷன் கடை களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஆண்டுக்கொரு முறை முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, சென்னை கூட்டுறவு சார் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் 1,113 முழு நேர ரேஷன் கடைகள், 279 பகுதி நேரக்கடைகள் என மொத்தம் 1,412 கூட்டுறவு ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 924 விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

முழு உடல் பரிசோதனை

இவர்களுக்கு கூட்டுறவுத்துறை, மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணைந்து முழு உடல் பரிசோதனை முகாம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக நேற்று ரேஷன்கடை பணியாளர்களுக்கு கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் இ.சி.ஜி., ரத்த அழுத்தம், கண் பரிசோதனை, எக்ஸ்ரே பரிசோதனை, ரத்த பரிசோதனை, மகளிர்களுக்கான பரிசோதனைகள் உள்ளிட்ட அனைத்து நோய் கண்டறியும் பரிசோதனைகளும் நடந்தது.இதை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பண்ருட்டி தாலுகாவை சேர்ந்த ரேஷன் கடை பணியாளர்களுக்கு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியிலும், குறிஞ்சிப்பாடி தாலுகாவை சேர்ந்த ரேஷன் கடை பணியாளர்களுக்கு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியிலும், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய வட்டங்களை சேர்ந்த ரேஷன் கடை பணியாளர்களுக்கு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியிலும், விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் ஆகிய வட்டங்களை சேர்ந்த ரேஷன் கடை பணியாளர் களுக்கு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியிலும் முழு உடல் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது.

இதில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் நந்தகுமார், துணை பதிவாளர் (பொதுவினியோக திட்டம்) ராஜேந்திரன், கடலூர் துணை பதிவாளர் துரைசாமி, ஆஸ்பத்திரி கண்காணிப் பாளர் டாக்டர் சாய்லீலா, தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் காரல், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், டாக்டர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story