சேத்தியாத்தோப்பு அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது


சேத்தியாத்தோப்பு அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 24 Feb 2023 6:45 PM GMT (Updated: 24 Feb 2023 6:46 PM GMT)

சேத்தியாத்தோப்பு அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டாா்.

கடலூர்

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் விழுப்புரம் சரக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை பிரிவு இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் சேத்தியாத்தோப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு பகுதியில் 2 பேர் சரக்கு வாகனத்தில் இருந்த மூட்டைகளை, முட்டை ஏற்றி வந்த லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடினர். உடனே போலீசார் விரட்டிச்சென்று ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் பன்னீர்செல்வம் (வயது 42) என்பதும், சேத்தியாத்தோப்பு பகுதியில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி, ராசிபுரத்தில் உள்ள கோழி பண்ணைகளுக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது. மேலும் சரக்கு வாகனத்தில் எடுத்து சென்றால், போலீசில் சிக்கி விடுவோம் என்ற அச்சத்தில், முட்டை ஏற்றி வந்த லாரியில் கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து பன்னீர்செல்வத்தை கைது செய்த போலீசார், 1240 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம், லாரிகளை பறிமுதல் செய்தனர்.


Next Story