2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தி செல்வதை தடுக்கும் வகையில், உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, தர்மபுரி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் மற்றும் போலீசார், காடுச்செட்டிப்பட்டி சோதனைச்சாவடியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 16 மூட்டைகளில் 800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் தர்மபுரி மாவட்டம் கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்த துரை (வயது44) என்பவர் ரேஷன் அரிசியை கர்நாடகாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ரேஷன் அரிசியுடன் வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் துரையை கைது செய்தனர்.

கைது

இதேபோல் ராயக்கோட்டை பகுதியில், கிருஷ்ணகிரி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, ராயக்கோட்டையில் கிருஷ்ணகிரி மெயின் சாலையில் வசிக்கும் சக்திராஜ் (30) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். வீட்டில் 22 மூட்டைகளில் 1,100 கிலோ ரேஷன் அரிசி கடத்துவதற்கு பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.

இதுதொடர்பாக போலீசார் சக்திராஜை கைது செய்தனர். மேலும் வீட்டில் பதுக்கிய ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.


Next Story