நகை திருட்டு வழக்கில் கொள்ளையனுக்கு 6 ஆண்டு சிறை ராசிபுரம் கோர்ட்டு தீர்ப்பு


நகை திருட்டு வழக்கில் கொள்ளையனுக்கு 6 ஆண்டு சிறை  ராசிபுரம் கோர்ட்டு தீர்ப்பு
x

நகை திருட்டு வழக்கில் கொள்ளையனுக்கு 6 ஆண்டு சிறை ராசிபுரம் கோர்ட்டு தீர்ப்பு

நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் கோனேரிப்பட்டி திருப்பதி நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசு. இவருடைய மனைவி சுகன்யா (வயது 26). இவரது வீட்டில் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 12 பவுன் நகைகள், தங்க நாணயங்கள் திருட்டு போனது. இதுகுறித்து சுகன்யா அளித்த புகாரின்பேரில் ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து மதுரை ஆனையூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த மணிகண்டன் (44), கோவை ராஜி நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் என்கிற ஸ்டீபன் (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேருக்கும் ராசிபுரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த மதுரை மாவட்டம் மேலூர் நவனிப்பட்டி முன்னாள் ராணுவ வீரர்கள் காலனியை சேர்ந்த விஜய சங்கர் (46) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு ராசிபுரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்தது.

இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ரெஹனா பேகம் கொள்ளையன் விஜய சங்கருக்கு 2 சட்டப்பிரிவின் கீழ் 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.200 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


Next Story