இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை கடல் பசு


இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை கடல் பசு
x

பாம்பன் சின்ன பாலம் பகுதியில் இறந்த நிலையில் அரிய வகை கடல் பசு கரை ஒதுங்கியது/

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் கடல் பசு, டால்பின், ஆமை உள்ளிட்ட ஏராளமான அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் பாம்பன் சின்னப்பாலம் கடற்கரைப் பகுதியில் நேற்று இறந்த நிலையில் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கிக் கிடப்பதாக மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து வனச்சரகர் மகேந்திரன் உத்தரவின் பேரில் வனவர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் இணைந்து இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்த கடல் பசுவை பார்வையிட்டு அதன் நீளம், அகலம் உள்ளிட்டவைகளை அளந்து கால்நடை மருத்துவர் மூலம் பரிசோதனை செய்த பின்னர் கடற்கரையிலேயே குழி தோண்டிப் புதைத்தனர்.

இறந்த கடல் பசு சுமார் 200 கிலோ இருந்ததாகவும் கடலில் நீந்தும் போது ஏதேனும் பெரிய கப்பல் அல்லது ஆழ்கடல் மீன்பிடி படகின் அடியில் உள்ள இழைப் பகுதியில் அடிபட்டு தொடர்ந்து நீந்த முடியாமல் இறந்து கரை ஒதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.


Related Tags :
Next Story