சென்னை விமான நிலையத்தில் அரிய வகை குரங்குகள் பறிமுதல்; திருப்பி அனுப்ப சுங்க இலாகா அதிகாரிகள் நடவடிக்கை


சென்னை விமான நிலையத்தில் அரிய வகை குரங்குகள் பறிமுதல்; திருப்பி அனுப்ப சுங்க இலாகா அதிகாரிகள் நடவடிக்கை
x

சென்னை விமான நிலையத்துக்கு தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை குரங்கு குட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை

அரியவகை குரங்கு குட்டிகள்

சென்னை மீனம்பக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பயணி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக சுங்க இலாகா அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரித்தனர்.

அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் கொண்டு வந்து உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது உடமைகளில் இருந்த கூடையில் லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து சுங்க இலாக அதிகாரிகள் பையைத் திறந்து பாா்த்தனா். அதில் அரிய வகை உயிரினங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். அவை ஆப்பிரிக்க நாட்டு வனப்பகுதி மற்றும் அட்லாண்டிக் கடற்கரை பகுதிகளில் வசிக்கும் அரிய வகை குரங்கு குட்டிகள் என்பது தெரியவந்தது.

சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல்

இது தொடர்பாக அரிய விலங்குகளை விதிமுறைப்படி நாட்டிற்குள் கொண்டுவருவதற்கான எந்த ஆவணங்களும் பயணியிடம் இல்லாதது உறுதியானது. குறிப்பாக மற்ற நாட்டிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையிடமும், இந்திய வனவிலங்கு துறையிடமும் தடையில்லா சான்றிதழ் அனுமதி பெற்றதற்கான சான்றிதழ்களும் இருக்க வேண்டும்.

இது போன்ற எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் 2 குரங்கு குட்டிகளையும் பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், குரங்கு குட்டிகளை மீண்டும் தாய்லாந்து நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.


Next Story