அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு


அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 11 Oct 2023 6:45 PM GMT (Updated: 11 Oct 2023 6:47 PM GMT)

குமரியில் பெய்த தொடர் மழையால் அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கும்பப்பூ சாகுபடியை தண்ணீர் பிரச்சினையின்றி விவசாயிகள் சமாளிக்கலாம்.

கன்னியாகுமரி

குலசேகரம்:

குமரியில் பெய்த தொடர் மழையால் அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கும்பப்பூ சாகுபடியை தண்ணீர் பிரச்சினையின்றி விவசாயிகள் சமாளிக்கலாம்.

பலத்த மழை

குமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்த நிலையில் கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்தது. இந்தநிலையில் மீண்டும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதே போன்று மலையோர பகுதிகளான குலசேகரம், திற்பரப்பு, களியல், கடையாலுமூடு, பத்துகாணி, ஆறுகாணி, பனச்சமூடு, அருமனை, திருவட்டார், சுருளகோடு, சித்திரங்கோடு, அடையாமடை, தடிக்காரன்கோணம், மாறாமலை, பாலமோர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

கும்பப்பூ சாகுபடிக்கு பிரச்சினை இருக்காது

இந்த மழையின் காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. இதனால் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் ஏற்கனவே வெள்ள அபாய அளவான 12 அடியைக் கடந்துள்ள நிலையில் தற்போது 15 அடியை நெருங்கி வருகிறது. இதே போன்று பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 35 அடியையும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 64 அடியையும் எட்டி வருகிறது. இரண்டாம் பருவ நெல் சாகுபடியான கும்பப்பூ சாகுபடிக்கு தட்டுப்பாடில்லாமல் தண்ணீர் கிடைக்கும் வகையில் அணைகளில் நீர் இருப்பு உள்ளது. அதே சமயத்தில் மழை தொடர்ந்து நீடிப்பதால் ரப்பர் தோட்ட தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story