மனநலம் பாதித்த பெண் பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது
சங்கரன்கோவில் அருகே மனநலம் பாதித்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள பி.ஆலங்குளத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் விஜயதுரை (வயது 27). இவர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது தந்தையிடம் தெரிவித்தார். உடனே அவர் விஜயதுரையை கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்த விஜயதுரை, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயதுரையை கைது செய்தனர்.
Related Tags :
Next Story