ராணிப்பேட்டை .வேலூர், திருப்பத்தூர்மாவட்டங்களில் 6 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி போட இலக்கு


ராணிப்பேட்டை .வேலூர், திருப்பத்தூர்மாவட்டங்களில்  6 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி போட இலக்கு
x

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் 6 ஆயிரம் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் 6 ஆயிரம் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெறிநோய்

உலக வெறிநோய் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 28-ந் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வெறிநோய் பாதிப்பு மற்றும் நோயை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இந்நோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர் நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாகவும் இந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உலக அளவில் நாய்கள் மூலம்தான் அதிகம் பேர் ரேபிஸ் நோயால் பாதிப்படைகின்றனர். வெறிநோய் பாதித்த நாய்கள் கடிப்பதால் மனிதர்களுக்கு இந்நோய் பரவுகிறது. எனவே நாய்களுக்கு தடுப்பூசி போடுவது அவசியமாகிறது.

இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வளர்ப்பு நாய்களுக்கான தடுப்பூசி முகாம் கால்நடைத்துறை சார்பில் நேற்று வேலூர், திருப்பத்தூர், ராணி்பேட்டை மாவட்டங்களில் உள்ள கால்நடை் மருத்துவமனைகளில் நடந்தது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் சுமார் 6 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தெரு நாய்களுக்கும் இந்த தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி

வேலூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் நடந்த முகாமை மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் தொடங்கி வைத்தார். கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் உதவி இயக்குனர் அந்துவன், கவுன்சிலர் காஞ்சனாகிருஷ்ணமூர்த்தி, டாக்டர்கள் ரவிசங்கர், நாசர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில், பொதுமக்கள் பலர் தங்களது நாய்களைக் கொண்டு வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். வேலூரில் நடந்த முகாமில் ஒரேநாளில் வளர்ப்பு நாய் உள்பட தெரு நாய்கள் என 200 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story