ராமேசுவரம்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மாரத்தான் போட்டி தொடக்கம்


ராமேசுவரம்:  முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மாரத்தான் போட்டி தொடக்கம்
x

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு ராமேசுவரத்தில் நடந்த மாரத்தான் போட்டியை இஸ்ரோ தலைவர் சோம்நாத் தொடங்கி வைத்து உள்ளார்.

ராமேசுவரம்,

முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அவர் பிறந்த ஊரான ராமேசுவரத்தில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

இதனை இஸ்ரோ தலைவர் சோம்நாத் கொடியசைத்து தொடங்கி வைத்து உள்ளார். அவர் மதுரை விமான நிலையத்திற்கு வந்திருந்தபோது, செய்தியாளர்களின் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, எஸ்.எஸ்.எல்.வி. போன்ற சிறிய வகை ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்கு குலசேகரப்பட்டினம் ஏவுதளம் மிக பயனுள்ள ஒன்றாக இருக்கும்.

ஸ்ரீஹரிகோட்டாவில் சிறிய ராக்கெட்டுகளை ஏவும்போது அவை, இலங்கையை சுற்றி செல்ல வேண்டி இருக்கிறது. இதனால் அதிக செலவு ஏற்படுகிறது.

குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்கப்பட்டால் நேரடியாக ராக்கெட் விண்வெளிக்கு சென்றடையும். இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி ஏறக்குறைய நிறைவடைந்து விட்டது. சுற்றுச்சுவர் எழுப்பி பாதுகாப்பு பணிகள் நடக்கின்றன. 2 வருடங்களில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு ராக்கெட் ஏவுதளம் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறியுள்ளார்.


Next Story