ரம்ஜான் நோன்பு தொடக்கம்

ரம்ஜான் நோன்பு தொடக்கம்
சேவூர்,
ரம்ஜான் நோன்பு நேற்று தொடங்கியுள்ள நிலையில் சேவூர் பள்ளிவாசலிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையாக ரம்ஜான் உள்ளது. இந்த பண்டிகை கொண்டாடுவதற்கு முன்பாக இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். இந்நிலையில் ரம்ஜான் நோன்பையொட்டி, சேவூர் தக்னி சுன்னத் வல்ஜமாத் பள்ளிவாசலில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதுகுறித்து தலைவர் ஜனாப். சி.ஏ.ஷாஆலம் கூறியதாவது:- பிறைபார்க்கப்பட்டதால், நேற்று முன் தினம் இரவு தராபியா எனும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இத் தொழுகையில் முஸ்லிம் ஆண்கள் 100 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இம்மாதம் முழுவதும் தினமும் இரவு ஒரு மணிநேரம் 9 மணி முதல் 10 மணி வரை இத் தொழுகை நடைபெறும். மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, உலக மக்களின் ஆரோக்கியம் உள்ளிட்ட அனைத்து நலவுகள் தடையின்றி கிடைத்திட பிரார்த்தனை, துவா செய்யப்பட்டது.மேலும் இம்மாதம் முழுவதும் பகலில் நோன்புவிரதம் இருக்கும் இஸ்லாமியர்களுக்கும், அனைத்து சமூக மக்களுக்கும் இன்றிலிருந்து (நேற்று) 30 நாட்களுக்கும் தினமும் மாலை நோன்பு கஞ்சி வழங்கப்படுகிறது.