ரமலான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்; இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகை
ரம்ஜான் பண்டிகையையொட்டி காலையிலேயே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
சென்னை,
ஈகைப் பெருநாளான ரமலான் பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் நேற்று முன்தினம் அறிவித்தார் அந்த வகையில், தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
ரம்ஜான் பண்டிகையையொட்டி காலையிலேயே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். ஈத்கா மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, தென்காசி உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி உள்பட இந்தியாவின் பிற இடங்களில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையிலேயே பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மசூதிகளில் கூடி கூட்டாக சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர்.