விநாயகர் சிலை ஊர்வலம்


விநாயகர் சிலை ஊர்வலம்
x

விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கை நகர் பா.ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நகரில் 9 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடந்தது. பின்னர் இந்த சிலைகளை சிவகங்கை சிவன் கோவிலுக்கு கொண்டு வந்து நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து சென்றனர். இந்த ஊர்வலத்தை சிவகங்கை நகர் பா.ஜ.க. தலைவர் உதயா தலைமையில் பா.ஜ.க. சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தை தொடங்கி வைத்த பின்னர் அவர் பா.ஜ.க. தொண்டர்களுடன் சேர்ந்து ஊர்வலத்தில் நடந்து வந்தார். ஊர்வலத்தையொட்டி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தர்ராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் சிவகங்கை நகர் நேரு பஜார் வழியாக ஊர்வலம் செல்வதற்கு போலீசார் தடை விதித்து இருந்தனர். இதனால் சிவகங்கை நேரு பஜார் நுழைவு வாசலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் அதிரடி படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வேலூர் இப்ராகிம் உள்ளிட்டவர்கள் நேரு பஜார் வழியாக செல்ல அனுமதி கேட்டனர். தொடர்ந்து அவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் பேசி சமரசம் செய்தார். இதன் பின்னர் ஊர்வலம் தெற்கு ராஜ வீதி வழியாக சென்றது. ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று சிவகங்கை தெப்பக்குளத்தை அடைந்து முடிந்தது. அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் இந்துமுன்னணியின் மாவட்ட செயலாளர் குணசேகரன், பா.ஜ.க. தேசிய குழு உறுப்பினர் சொக்கலிங்கம், மாநில பொருளாதார பிரிவு செயலாளர் செல்வராஜ், மாவட்ட பிரசார அணி தலைவர் அங்குசாமி, பா.ஜ.க. பொது செயலாளர்கள் சதீஷ் மற்றும் பாலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story