ராயக்கோட்டையில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு ஊர்வலம்
ராயக்கோட்டையில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு ஊர்வலம்
ராயக்கோட்டை:
கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்டையில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய ஊர்வலத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் கேசவமூர்த்தி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். தேன்கனிக்கோட்டை உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சென்னகிருஷ்ணன் ஆகியோர் மாணவர்களுக்கு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தகூடாது. வீட்டையும், தெருவையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலத்தில் மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி நடந்து சென்றனர். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முகிலன், சுகாதார மேற்பார்வையாளர் ஏகாம்பரம், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கஞ்சப்பன், ஊராட்சி செயலாளர்கள் சந்திரகுமார், கோவிந்தராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.