ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா
தூத்துக்குடி மாவட்டத்தில் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 78-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை முன்னிட்டு மாவட்ட அலுவலகத்தின் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவ படத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் செந்தூர்பாண்டியன், ராஜன், மாநகர் மாவட்ட துணை தலைவர்கள் பிரபாகரன், அருணாசலம், தனபால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் நடந்த விழாவுக்கு, நகரத் தலைவர் தாமஸ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் வில்லின் பெலிக்ஸ் வரவேற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு இணைத் தலைவர் வக்கீல் மகேந்திரன், ராஜீவ்காந்தி படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். விழாவில் கருங்கடல் பஞ்சாயத்து தலைவர் நல்லதம்பி, டாக்டர் ரமேஷ் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* தூத்துக்குடியில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும் ஐ.என்.டி.யூ.சி. மாநில பொது செயலாளருமான பெருமாள்சாமி ஏற்பாட்டின் பேரில் பழைய பஸ்நிலையம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட ராஜீவ் காந்தியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு அலங்கரிக்கப்பட்ட ராஜீவ்காந்தி உருவப் படத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் காமராஜ் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.. மாவட்ட பொருளாளர் கார்த்திக் காமராஜ், துணை தலைவர் திருப்பதி ராஜா ஆகியோர் இனிப்பு வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் சண்முகராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரேம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.