ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழா - தஞ்சை கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை


ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழா - தஞ்சை கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 3 Nov 2022 9:46 AM IST (Updated: 3 Nov 2022 10:23 AM IST)
t-max-icont-min-icon

ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தஞ்சை,

மாமன்னர் பொன்னியின் செல்வர் ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழா பெருவிழாவால் தஞ்சை பெருவுடையார் கோவில் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் ராஜராஜ சோழனின் சதய விழா தஞ்சை பெரிய கோவிலில் நடந்து வருகிறது. இந்த ஆண்டு மிக விமரிசையாக ராஜராஜ சோழனின் விழாவுக்கு கடந்த 25-ந்தேதி பந்தக்கால் முகூர்த்த விழா நடைபெற்றது.

இதற்கிடையே, ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். மேலும், தஞ்சையில் உள்ள மாமன்னர் ராஜராஜசோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பெருவிழாவின் முக்கிய நாளான இன்று கோவிலுக்கு வெளியில் உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


Next Story