ராஜ நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
அறந்தாங்கி அருகே ராஜ நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அறந்தாங்கி அருகே வல்லம்பகாடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற ராஜநாராயணபெருமாள் கோவில் உள்ளது. இங்கு கருடபகவான், பக்த ஆஞ்சநேயர், விநாயகர், அரியநாயகி அம்மன், பதினெட்டாம்படி கருப்பர் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அருள் பாலித்து வருகின்றன. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இதையொட்டி கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றது. அதன்பின்னர் கடந்த 24-ந் தேதி யாகசாலை அமைத்து முதற்கால யாக பூஜை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி 4-ம் காலயாக பூஜை நிறைவுற்று கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் மேளதாளங்களுடன் கோவிலை சுற்றி வலம் வந்தபின் வேத மந்திரங்களை முழங்க கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் ெசய்தனர். விழாவில் வல்லம்பகாடு, அரசர்குளம், பிடாரிகாடு உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.