உலக யோகா போட்டிக்கு தேர்வானவர்களுக்கு ராஜா எம்.எல்.ஏ. வாழ்த்து
உலக யோகா போட்டிக்கு தேர்வானவர்களுக்கு ராஜா எம்.எல்.ஏ. வாழ்த்து தெரிவித்தார்.
சங்கரன்கோவில்:
தேசிய அளவில் ஸ்கூல் கேம் ஆக்டிவிட்டி டெவலப்மெண்ட் பவுண்டேஷன் சார்பில் தேசிய அளவிலான யோகா போட்டி கடந்த 17-ந் தேதி மதுரையில் நடந்தது. இதில் வீ.கே.புதூர் பீனிக்ஸ் யோகா பயிற்சி மையத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் 40 பேர் கலந்துகொண்டனர். இதில் 26 பேர் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை பெற்று உலக அளவில் நவம்பர் மாதம் நடக்க உள்ள யோகா போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
தேர்வான மாணவ-மாணவிகள் தாங்கள் பெற்ற பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.வை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து மாணவ-மாணவிகள் யோகாசனம் செய்து அசத்தினர். அவர்களுக்கு ராஜா எம்.எல்.ஏ. பதக்கங்களை அணிவித்து சான்றிதழ்கள் வழங்கி கல்வி உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு ராஜா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் உணவு வழங்கப்பட்டது.
யோகா பயிற்சியாளர்கள் மருதுபாண்டி, ரேவதி, பேரூர் கழகச் செயலாளர் மாரிமுத்து, விவசாய தொழிலாளர் அணி தலைவர் கலைச்செல்வன், ஓய்வு பெற்ற தாசில்தார் சூரியநாராயண மூர்த்தி, கணேஷ், ஜெயக்குமார், கார்த்தி, வக்கீல் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.