நாமக்கல்லில் அதிகபட்சமாக21 மி.மீட்டர் மழைபதிவு
நாமக்கல்லில் அதிகபட்சமாக 21 மி.மீட்டர் மழைபதிவானது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக நாமக்கல்லில் 21 மி.மீட்டர் மழைபதிவானது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழைஅளவு மி.மீட்டரில் வருமாறு:-
கலெக்டர் அலுவலகம்-13, புதுச்சத்திரம்-12, ராசிபுரம்-9, சேந்தமங்கலம்-5, குமாரபாளையம்-4, எருமப்பட்டி-3.
நாமக்கல் நகரை பொறுத்த வரையில் நேற்று காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இருப்பினும் மாலை 5 மணிக்கு பிறகு லேசான சாரல்மழை பெய்தது. இதனால் இரவில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
Related Tags :
Next Story