மணல்மேட்டில் அதிகபட்சமாக 28 மில்லி மீட்டர் மழை
மணல்மேட்டில் அதிகபட்சமாக 28 மில்லி மீட்டர் மழை பெய்தது.
மயிலாடுதுறை
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக நகர்ந்து வருவதால் மயிலாடுதுறை உள்ளிட்ட கடற்கரையோர மாவட்டங்களில் மிதமான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் விட்டு விட்டு லேசான மழை பெய்தது. நேற்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை கனமழை பெய்தது. அதன் பின்னர் லேசான தூறல் காணப்பட்டது. பகலில் இதமான வெயில் அடித்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மணல்மேட்டில் 28 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பதிவான மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- மயிலாடுதுறை -20, சீர்காழி-12, தரங்கம்பாடி-9, கொள்ளிடம்-6, செம்பனார்கோவில்-5.
Related Tags :
Next Story