குமரி மாவட்டத்தில் மழை


குமரி மாவட்டத்தில் மழை
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் மழை பெருஞ்சாணியில் 60.6 மி.மீ. பதிவு

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். ஆனால் மேற்கு மாவட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதே போல நேற்று முன்தினம் அணைகள் மற்றும் மலையோர பகுதிகளில் மழை பெய்தது. பெருஞ்சாணி பகுதியில் சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது. இதுபோல் புத்தன்அணை, சுருளகோடு, பாலமோர், முக்கடல், திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழை அதிகபட்சமாக பெருஞ்சாணியில் 60.6 மில்லி மீட்டர் பதிவானது.

இதே போல் மாவட்டத்தில் பிற பகுதிகளில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பேச்சிப்பாறை-21.2, சிற்றார் 1-12, சிற்றார் 2-4, கன்னிமார்-4.4, புத்தன்அணை-58.2, சுருளகோடு-21.4, தக்கலை-2.4, பாலமோர்-12.6, மாம்பழத்துறையாறு-6, திற்பரப்பு-5.8, அடையாமடை-7.2, ஆனைகிடங்கு-4.2, முக்கடல்-10.8 என்ற அளவில் மழை பெய்திருந்தது.

அணைகளுக்கான நீர்வரத்தை பொறுத்த வரை பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 141 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 199 கனஅடி தண்ணீரும் வந்தது.


Next Story