குமரி மாவட்டத்தில் மழை
குமரி மாவட்டத்தில் சுருளோடு பகுதியில் 75.2 மி.மீ. மழை பதிவானது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் சுருளோடு பகுதியில் 75.2 மி.மீ. மழை பதிவானது.
மழை
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. சுருளோட்டில் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. பூதப்பாண்டி, கன்னிமார் பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சுருளோடு பகுதியில் 75.2 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பேச்சிப்பாறை அணை- 19, பெருஞ்சாணி அணை- 32.6, சிற்றார்1- 20.2, புத்தன் அணை -30.8, முக்கடல் அணை- 7, பூதப்பாண்டி -25.2, கன்னிமார்- 38.6, தக்கலை- 2, பாலமோர்- 62.4, திற்பரப்பு- 6 என்ற அளவில் மழை பதிவானது.
அணைகளின் நீர்மட்டம்
பேச்சிப்பாறை அணைக்கு நேற்று வினாடிக்கு 1102 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 482 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர்மட்டம் 42.58 அடியாக உள்ளது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 1,241 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர்மட்டம் 72.15 அடியாக உள்ளது. இதையடுத்து இந்த அணையின் உபரித் தண்ணீர் பாயும் பரளியாறு மற்றும் தாமிரபரணியாற்றின் கரைகளில் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.40 அடியாக உள்ளது.