குமரி மாவட்டத்தில் மழை


குமரி மாவட்டத்தில் மழை
x

குமரி மாவட்டத்தில் மழை பேச்சிப்பாறையில் 12.8 மி.மீ. பதிவு

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தட்ப-வெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினமும், நேற்றும் நாகர்கோவில் சுற்று வட்டாரப் பகுதிகளில் எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்ற அறிகுறிகளுடன் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. ஆனால் மழை பெய்யவில்லை. அதேநேரத்தில் அணைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. மேலும் மார்த்தாண்டம், தக்கலை உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.

பேச்சிப்பாறை அணைப் பகுதியில் 12.8 மி.மீ. மழையும், பெருஞ்சாணி அணைப்பகுதியில் 12 மி.மீ. மழையும், சிற்றார்-1 அணைப்பகுதியில் 9.4 மி.மீ. மழையும், சிற்றார்-2 அணைப்பகுதியில் 7.6 மி.மீ. மழையும், புத்தன் அணைப்பகுதியில் 10.6 மி.மீ. மழையும், தக்கலை பகுதியில் 1.3 மி.மீ. மழையும், மாம்பழத்துறையாறு அணைப்பகுதியில் 1 மி.மீ. மழையும், ஆனைக்கிடங்கு பகுதியில் 1 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 504 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 560 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம்43.05 அடியாக உள்ளது.


Next Story