குமரி மாவட்டத்தில் மழை
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையில் அதிகபட்சமாக கன்னிமார் பகுதியில் 32.2 மில்லி மீட்டர் பதிவானது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையில் அதிகபட்சமாக கன்னிமார் பகுதியில் 32.2 மில்லி மீட்டர் பதிவானது.
பரவலாக மழை
குமரி மாவட்டத்தில் வெயில் கடுமையாக இருந்து வந்த போதிலும் இடையிடையே மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் மாவட்டத்தின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ) வருமாறு:-
பேச்சிப்பாறை அணை- 8.6, பெருஞ்சாணி அணை- 4, சிற்றார்-1 அணை-1.4, முக்கடல் அணை- 6, பூதப்பாண்டி- 12, கன்னிமார்- 32.2, புத்தன் அணை- 3.2, சுருளக்கோடு- 5, பாலமோர்- 15.2, ஆரல்வாய்மொழி- 2 என்ற அளவில் மழை பதிவாகி உள்ளது. மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 709 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 839 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 489 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 1 கன அடி தண்ணீர் வருகிறது. முக்கடல் அணைக்கு வினாடிக்கு 4.6 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 8.6 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழ்நாடு கடலோர பகுதிகளிலும், மன்னார் வளைகுடா மற்றும் வங்காள விரிகுடா கடலின் தென்மேற்கு பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேற்று முதல் வருகிற 20-ந் தேதி கேரள கடலோர பகுதிகளிலும், லட்சத்தீவு பகுதி மற்றும் அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதாலும் இந்த பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.