குமரியில் சாரல் மழை
குமரியில் சாரல் மழை
கன்னியாகுமரி
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பனிப்பொழிவு இருந்து வருகிறது. இந்த பனிப்பொழுவின் தாக்கம் காலை 8 மணி வரை காணப்படுகிறது. பின்னர் காலையில் இருந்து வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் கடலோர பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நேற்று நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. கோட்டார் பறக்கை சாலை உள்பட பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதுபோல் மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்தது. மலையோரம் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story