குமரியில் சாரல் மழை


குமரியில் சாரல் மழை
x

குமரியில் சாரல் மழை பெய்துள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நீடித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக பெருஞ்சாணி பகுதியில் 8.2 மில்லி மீட்டர் மழை பதிவானது. நாகர்கோவிலில் நேற்று காலையில் வானில் மேக மூட்டங்கள் காணப்பட்டன. சிறிது நேரத்தில் சாரல் மழை பெய்தது. இதுபோல் மார்த்தாண்டம், குழித்துறை போன்ற பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. மலையோர பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.


Next Story