வேப்பனப்பள்ளி பகுதியில்பலத்த காற்றுடன் கோடை மழைபொதுமக்கள் மகிழ்ச்சி


வேப்பனப்பள்ளி பகுதியில்பலத்த காற்றுடன் கோடை மழைபொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 22 April 2023 12:30 AM IST (Updated: 22 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி பகுதியில் பலத்த காற்றுடன் கோடை மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கனமழை

வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. காலை முதல் மாலை வரை 100 டிகிரியை கடந்து வெயில் சுட்டெரிப்பதால் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் அவதியடைந்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை முதல் வேப்பனப்பள்ளி பகுதியில் வெயில் அடித்தது. இதையடுத்து மாலையில் திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

வேப்பனப்பள்ளி, குந்தாரப்பள்ளி, மாதேப்பள்ளி, நாச்சிகுப்பம், நேரலகிரி, தீர்த்தம், குருபரப்பள்ளி பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. கோடை மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story