வேப்பனப்பள்ளி அருகே பலத்த மழைக்கு கால்வாய் உடைந்து கிராமத்துக்குள் புகுந்த மழைநீர்


வேப்பனப்பள்ளி அருகே பலத்த மழைக்கு  கால்வாய் உடைந்து கிராமத்துக்குள் புகுந்த மழைநீர்
x

வேப்பனப்பள்ளி அருகே பலத்த மழைக்கு கால்வாய் உடைந்து கிராமத்துக்குள் புகுந்த மழைநீர்

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பின. இந்த நிலையில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. அப்போது எட்டிபள்ளி கிராமத்தின் அருகே உள்ள ஏரியில் நீர்கரை புரண்டு ஓடியது. இந்த ஏரியில் இருந்து கால்வாய் மூலம் ஆற்றுக்கு நீர் கொண்டு செல்லப்படும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சின்னபத்தளப்பள்ளி கிராமத்திற்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஊருக்குள் வெள்ளம் வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடைந்த இந்த கால்வாயை சீரமைத்து கிராம மக்களின் வீடு, உடமைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story