ரெயில்வே பணிகள்: கோவை வழியாக இயக்கப்படும் ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம்
திருநெல்வேலி- மும்பை தாதர் (22630) இடையேயான ரெயில் 11-ந் தேதியன்று மதியம் 3:07 மணிக்கு கோவை வரும்.
திருப்பூர்,
கோவை ரெயில் நிலையம் - வடகோவை ரெயில் நிலையம் இடையே ரெயில்வே என்ஜினீயரிங் பணிகள் நடந்து வருவதால்4 ரெயில்கள் கோவை ரெயில் நிலையம் வராது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
செகந்திராபாத்- கோட்டயம் (07125) இடையேயான வாராந்திர சிறப்பு ரெயில் 9ந் தேதியன்று மதியம் 3:07 மணிக்கு கோவை ரெயில் நிலையம் வரும் ரெயில் இருகூர்- போத்தனூர் வழியாக சென்று, போத்தனூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். பிலாஸ்பூர்- எர்ணாகுளம் (22815) இடையேயான வாராந்திர ரெயில் வரும் 10ந் தேதி மதியம் 3:42 மணிக்கு கோவை வரும். போத்தனூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
திருநெல்வேலி- மும்பை தாதர் (22630) இடையேயான ரெயில் 11-ந் தேதியன்று மதியம் 3:07 மணிக்கு கோவை வரும். போத்தனூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். பிலாஸ்பூர்- திருநெல்வேலி (22619) இடையேயான ரெயில் 11ந் தேதியன்று மதியம் 3:42 மணிக்கு கோவை ரெயில் நிலையம் வரும். போத்தனூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொர்ணூர் - கோவை விரைவு ரெயில் (எண்: 06458), கோவை - சொர்ணூர் விரைவு ரெயில் (எண்: 06459) ஜனவரி 17 ந் தேதி முதல் 30ந் தேதி வரை போத்தனூா் - கோவை நிலையம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது போத்தனூா் - சொர்ணூர் வரை மட்டுமே இயக்கப்படும்.