பள்ளி, கல்லூரி விடுமுறை முடிந்தது ஈரோடு ரெயில் நிலையத்தில் திரண்ட பயணிகள்


பள்ளி, கல்லூரி விடுமுறை முடிந்தது ஈரோடு ரெயில் நிலையத்தில் திரண்ட பயணிகள்
x

பள்ளி, கல்லூரி விடுமுறை முடிந்ததை தொடர்ந்து ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் திரண்டனர்.

ஈரோடு

பள்ளி, கல்லூரி விடுமுறை முடிந்ததை தொடர்ந்து ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் திரண்டனர்.

இன்று திறப்பு

தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஈரோட்டில் தங்கியிருந்து படிக்கும் மாணவ-மாணவிகளும், வேலை செய்பவர்களும் பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றார்கள். மேலும், நேற்றும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

இதனால் கடந்த சனிக்கிழமையில் இருந்து நேற்று வரை 4 நாட்கள் சொந்த ஊர்களில் பண்டிகையை சிறப்பாக மக்கள் கொண்டாடினர்.

இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகிறது. எனவே குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தவர்கள் நேற்று மீண்டும் ஈரோட்டுக்கு திரும்பினார்கள். அவர்கள் பஸ்களிலும், ரெயில்களிலும் வந்ததால் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

கூட்டம் அலைமோதியது

ரெயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காத பயணிகள், நேற்று பகலில் இயக்கப்பட்ட முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஈரோட்டுக்கு திரும்பினார்கள். இதனால் தென் மாவட்டங்களில் இருந்து வந்த ரெயில்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. எனவே ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் திரண்டதால் பரபரப்புடன் காணப்பட்டது.

இதேபோல் இரவில் இயக்கப்பட்ட பஸ்களிலும், ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.


Next Story