கோவில்பட்டியில் ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்
கோவில்பட்டியில் ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க மாதாந்திர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கிளைத் தலைவர் அருமைராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு மூத்த உறுப்பினர் ஹரிகர சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தீர்மானங்களை வலியுறுத்தி நாராயணன் பேசினார். சங்கப் பொருளாளர் முருகையா நன்றி கூறினார். கூட்டத்தில் ஓய்வூதியர்களின் மருத்துவப்படியை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரியும், வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும், 60 வயதிற்கு மேல் ஒவ்வொரு 5 வருடத்திற்கும் 5 சதவீத பென்சனை உயர்த்தி வழங்க கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story