திருவண்ணாமலை ரெயில் நிலையில் ரெயில்வே பயணிகள் வசதிகள் மேம்பாட்டு குழுவினர் ஆய்வு


திருவண்ணாமலை ரெயில் நிலையில் ரெயில்வே பயணிகள் வசதிகள் மேம்பாட்டு குழுவினர் ஆய்வு
x

திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் ரெயில்வே பயணிகள் வசதிகள மேம்பாட்டு குழுவினர் ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை

ரெயில்வே பயணிகள் வசதிகள் மேம்பாட்டுக்குழு தலைவர் கிருஷ்ணதாஸ், உறுப்பினர்கள் ரவிசந்திரன், மதுசுதனன், மஞ்சநாத், கைலேஷ்லட்சுமண வர்மா, அபிஜித் தாஸ் ஆகியோர் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் எடுக்கும் இடம், நடைமேடை, சிற்றுண்டி கடைகள், பயணிகள் ஓய்வு அறை, கழிப்பறை ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது அவர்கள் ரெயில் நிலையத்தின் இருபுறமும் உள்ள ரெயில் நடைமேடையில் மின்விசிறி வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இருபுறமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். ரெயில் நிலையத்தில் 2 கட்டண கழிப்பறைகள் உள்ளன. இதில் ஒன்றை இலவசமாக மாற்றி சுமை தூக்கும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

ரெயில் டிக்கெட் எடுக்கும் இடத்தில் கூடுதலாக பயணிகள் இருக்கைகள் அமைக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பயணிகள் வந்து செல்லும் வகையில் சாய்தளம் வசதி அமைக்க வேண்டும் என்று கூறினர்.


Next Story