ரெயில்வே கேட் மூடல்
தூத்துக்குடியில், இன்றும், நாளையும் பராமரிப்புக்காக 4-வது ரெயில்வே கேட் மூடல்
தூத்துக்குடி மாநகரை இரண்டாக பிரிக்கும் வகையில் ரெயில்வே தண்டவாளம் அமைந்து உள்ளது. இதனால் இரண்டு பகுதியையும் இணைக்கும் வகையில் 4 ரெயில்வே கேட்டுகள் அமைந்து உள்ளன. இதில் 3-வது ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் மற்ற 3 ரெயில்வே கேட்டுகளிலும் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக காணப்படுகிறது. இதில் தூத்துக்குடி அண்ணாநகரையும், குறிஞ்சிநகர் மற்றும் புதிய பஸ் நிலையத்தையும் இணைக்கும் வகையில் 4-வது ரெயில்வே கேட் அமைந்து உள்ளது.
இந்த ரெயில்வே கேட்டில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரையும், நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரையும் பகுதியாக 4-வது ரெயில்வே கேட் மூடப்படுகிறது. ஆகையால் பொதுமக்கள் இந்த நேரத்தில் மாற்றுப்பாதையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.