ராகுல்காந்தி எம்.பி. பதவி ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மகிளா காங்கிரசார் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்


ராகுல்காந்தி எம்.பி. பதவி ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மகிளா காங்கிரசார் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்
x

ராகுல்காந்தி எம்.பி. பதவி ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மகிளா காங்கிரசார் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவள்ளூர்

ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையும், அவரது எம்.பி. பதவி ரத்து செய்யப்பட்டதையும் கண்டித்து கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் பஜாரில் திருவள்ளூர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் தீப்பந்தம் ஏந்திய கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ஜோதி சுதாகர் தலைமை தாங்கினார். மாவட்டதலைவர் ஏ.ஜி.சிதம்பரம், பொன்னேரி எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகர், நிர்வாகிகள் சிவா ரெட்டி, ஆரம்பாக்கம் பெரியசாமி, வழக்கறிஞர் சம்பத் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின்போது, ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையும், அவரது பதவி பறிக்கப்பட்டதையும் கண்டித்து காங்கிரசார் கோஷமிட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியினர் பலரும் பங்கேற்றனர்.


Next Story