மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் இயற்றியது. இதனை ராகுல் காந்தி ஏற்று கொண்டார். இதனை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்தியா கூட்டணியின் அவை தலைவர்கள் ஒன்று கூடி அவரை தேர்வு செய்துள்ளனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "என் அன்பு சகோதரன் ராகுல் காந்தியை, அவரது புதிய பதவிக்காக இந்தியா வரவேற்கிறது... அவரது குரல் மக்கள் மன்றத்தில் (லோக்சபா) தொடர்ந்து பலமாக ஒலிக்கட்டும்" என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story