சிவன் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா


சிவன் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா
x

சிவன் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடந்தது.

திருச்சி

முசிறி:

முசிறியில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் மதியம் 3.40 மணிக்கு பெயர்ச்சியானதை தொடர்ந்து மதியம் விநாயகர் வழிபாடு, ராகு மற்றும் கேது பகவான் ஆவாகன ஸ்தாபன பூஜை, யாகபூஜைகள், மகா பூர்ணஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவிலில் உள்ள நவகிரக சன்னதியில் ராகு, கேது மற்றும் ஏனைய கிரகங்களுக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்தனர். இடப்பெயர்ச்சி பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் மாணிக்கசுந்தர சிவாச்சாரியார், நாகராஜ் சிவாச்சாரியார் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அபிஷேகத்திற்கு பால் மற்றும் யாக பூஜைக்குரிய பொருட்களை வழங்கி சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் திருச்சி சாலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலிலும் லிங்க வடிவில் உள்ள ராகு, கேது மற்றும் நவக்கிரகங்களுக்கு சிறப்பு யாக பூஜையும், அபிஷேகமும் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

கல்லக்குடி புதிய சமத்துவபுரத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவில், கல்லக்குடி நித்யகல்யாணி சமேத பசுபதீஸ்வரர் கோவில், பஸ் நிலையம் பிள்ளையார் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் ராகு-கேது பெயர்ச்சியையொட்டி சிறப்பு அபிஷேகம் செய்து, பக்தர்கள் வழிபட்டனர். மேலும் ஆலம்பாக்கம், திண்ணகுளம், விரகாலூர், இ.வெள்ளனூர், வெங்கடாசலபுரம், கோவாண்டகுறிச்சி, சிறுகளப்பூர், ஊட்டத்தூர், ரெட்டிமாங்குடி, பிகே.அகரம், பு.சங்கேந்தி, புள்ளம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சிவன் கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது.


Next Story