எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்


எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
x

எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 8 பேர் காயமடைந்தனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி ஊராட்சி, வெள்ளைய கவுண்டனூர் கிராமத்தில் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் க.தேவராஜி எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு எருது விடும் விழாவை கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.

திருப்பத்தூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, ஜோலார்பேட்டை, ஆலங்காயம், மிட்டூர், நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து அனுமதி வழங்கினர். குறைந்த நேரத்தில் சீறிப்பாய்ந்து இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.60 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.45 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.35 ஆயிரம் என மொத்தம் 45 பரிசுகள் வழங்கப்பட்டது.

சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற 8 பேருக்கு சிறு காயமும், ஒருவர் படுகாயமும் அடைந்தனர். அவர்களுக்கு அங்கு இருந்த மருத்துவ குழுவினர் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. காவல்துறையினர், வருவாய்த்துறையினர், தீயணைப்பு துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story