சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்


சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்
x

சிவகங்கை, காரைக்குடி பகுதியில் நடைபெற்ற பந்தயத்தில் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்தன.

சிவகங்கை


சிவகங்கை, காரைக்குடி பகுதியில் நடைபெற்ற பந்தயத்தில் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்தன.

மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை அருகே கண்டுப்பட்டி சேகரம் செங்குளிப்பட்டியில் உள்ள பூர்வீக காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் கண்டுப்பட்டி-பாகனேரி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 17 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 6 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை மேலூர் அழகன்கவுசிக் வண்டியும், 2-வது பரிசை அவனியாபுரம் மோகன் வண்டியும், 3-வது பரிசை பொன்பேத்தி மருதுபாண்டிய வல்லாலத்தேவர் வண்டியும் பெற்றன.

பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 11 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கொட்டக்குடி முத்துராமன் வண்டியும், 2-வது பரிசை கம்பம் குமார் வண்டியும், 3-வது பரிசை கூடலூர் போதுராஜா வண்டியும் பெற்றது.

புதுவயல் பந்தயம்

இதேபோல் காரைக்குடி அருகே புதுவயலில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மாட்டு வண்டி பந்தயம் புதுவயல் பஸ் நிலையத்தில் இருந்து செங்கரை நான்கு ரோடு சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 26 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 9 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை அவனியாபுரம் மோகன் மற்றும் புதுவயல் பேரூராட்சி துணைத்தலைவர் பக்ருதீன் வண்டியும், 2-வது பரிசை வெளிமுத்தி வாகினி பைனான்ஸ் மற்றும் புதுப்பட்டி இளையராஜா வண்டியும், 3-வது பரிசை சிங்கவனம் ஜமீன்ராஜா வண்டியும் பெற்றது.

பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 17 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை வைரிவயல் வீரமுனியாண்டவர் மற்றும் புதுவயல் பேரூராட்சி துணைத்தலைவர் பக்ருதீன் வண்டியும், 2-வது பரிசை சிங்கவனம் ஜமீன்ராஜா வண்டியும், 3-வது பரிசை ரெத்தினகோட்டை ஜெமினி மற்றும் காட்டு பிரான்மலைவயல் ஜிவானி வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பந்தயத்தில் சீறிப்பாய்ந்த வண்டிகளை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.


Next Story