கல்லல் அருகே பந்தயம்:சீறிப்பாய்ந்த மாட்டுவண்டிகள்


கல்லல் அருகே பந்தயம்:சீறிப்பாய்ந்த மாட்டுவண்டிகள்
x

கல்லல் அருகே மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது

சிவகங்கை

கல்லல்,

கல்லல் அருகே பனங்குடி பெரியநாயகி அம்மன் கோவில் தேர்திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் பனங்குடி-கண்டுப்பட்டி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 21வண்டிகள் கலந்துகொண்டன.

பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 7 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை பல்லவராயன்பட்டி இளமாறன் வண்டியும், 2-வது பரிசை மாத்தூர் சேரன்செங்குட்டுவன் வண்டியும், 3-வது பரிசை வெள்ளரிப்பட்டி சமர்சித் வண்டியும் பெற்றன. பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 14 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை பூக்கொல்லை ரித்தீஸ்வரன் வண்டியும், 2-வது பரிசை பொட்டிபுரம்புதூர் பெரியசாமி அன்சன்ஸ் வண்டியும், 3-வது பரிசை வெளிமுத்தி வாகினி பைனான்ஸ் மற்றும் நெய்வாசல் பெரியசாமி வண்டியும் பெற்றன. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையில் சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளை ஏராளமானோர் வேடிக்கை பார்த்தனர்.


Next Story