காளையார்கோவில் பகுதியில் பந்தயம்: சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்
காளையார்கோவில் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்தன.
காளையார்கோவில்
காளையார்கோவில் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்தன.
மாட்டு வண்டி பந்தயம்
காளையார்கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் காளையார்கோவில்-மறமங்கலம் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 27 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், நடுமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் ஆகிய 3 பிரிவுகளாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 6 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை அவனியாபுரம் மோகன் மற்றும் சிவல்புஞ்சை செல்லையா வண்டியும், 2-வது பரிசை தானாவயல் வெங்கடாச்சலம் வண்டியும், 3-வது பரிசை ஓரியூர் செல்வா வண்டியும், 4-வது பரிசை நல்லாங்குடி முத்தையா வண்டியும் பெற்றது.
பின்னர் நடைபெற்ற நடுமாட்டு வண்டி பந்தயத்தில் 11 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை அவனியாபுரம் மோகன் வண்டியும், 2-வது பரிசை கண்டரமாணிக்கம் ராஜகண்ணப்பன் வண்டியும், 3-வது பரிசை சூரிரக்குண்டு கார்த்திபன் வண்டியும், 4-வது பரிசை உடப்பன்பட்டி கணேஷ் காபி பார் வண்டியும் பெற்றது. இறுதியாக நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை தல்லாம்பட்டி சூரியா வண்டியும், 2-வது பரிசை காலக்கண்மாய் வீரபாலா வண்டியும், 3-வது பரிசை பணஞ்சாவயல் சக்தி வண்டியும், 4-வது பரிசை நாட்டரசன்கோட்டை முருகன் ஆகியோர் வண்டியும் பெற்றது.
நெடுவத்தாவு
இதேபோல் காளையார்கோவில் அருகே சிலுக்கப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நெடுவத்தாவு கிராமத்தில் கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நெடுவத்தாவு-காயா ஓடை சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 19 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 7 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை சிலுக்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருமூர்த்தி வண்டியும், 2-வது பரிசை நகரம்பட்டி கண்ணன் வண்டியும், 3-வது பரிசை வீரை அழகியமீனாள் வண்டியும், 4-வது பரிசை மேட்டுப்பட்டி ராஜாமணி வண்டியும் பெற்றது. இறுதியாக நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 12 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை மருங்கூர் நாச்சியார் வண்டியும், 2-வது பரிசை புதுப்பட்டி ஆதிக்ராஜா வண்டியும், 3-வது பரிசை கண்டதேவி மருதுபாண்டி வண்டியும், 4-வது பரிசை காளையார்கோவில் அருண்பிரதர்ஸ் ஆகியோரது வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. பந்தயத்தின் போது மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்து சென்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.