வெறிேநாய் தடுப்பூசி சிறப்பு முகாம்
வெறிேநாய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
திருச்சி
உப்பிலியபுரம் ஒன்றியம் எரகுடி ஊராட்சி மன்ற வளாகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதையொட்டி நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை ஒன்றிய குழு தலைவர் ஹேமலதாமுத்துச்செல்வன் தொடங்கி வைத்தார். முகாமில் வெறிநாயின் அறிகுறிகள், ரேபிஸ் நோயின் அறிகுறிகள், தற்காப்பு முறைகள், சிகிச்சை முறைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இதில் 84 நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் திருச்சி கால்நடைத்துறை நோய் புலனாய்வுப்பிரிவு துணை இயக்குனர் சுகுமார், முசிறி கால்நடைத்துறை துணை இயக்குனர் சையது முஸ்தபா, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story