தரமான விதைகள், இடு பொருட்களை 'அக்ரிகார்ட்' இணையதளம் மூலம் பெறலாம்


தரமான விதைகள், இடு பொருட்களை அக்ரிகார்ட் இணையதளம் மூலம் பெறலாம்
x
தினத்தந்தி 12 May 2023 12:15 AM IST (Updated: 12 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் தரமான விதைகள், இடுபொருட்களை ‘அக்ரிகார்ட்’ இணையதளம் மூலம் பெறலாம் என விதை ஆய்வு துணை இயக்குநர் சித்ரா கூறியுள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் தரமான விதைகள், இடுபொருட்களை 'அக்ரிகார்ட்' இணையதளம் மூலம் பெறலாம் என விதை ஆய்வு துணை இயக்குநர் சித்ரா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேளாண் விளை பொருட்கள்

வேளாண் விளை பொருட்களை நேரடியாக பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு உற்பத்தி சார்ந்த பொருட்களை எளிதாக கொள்முதல் செய்ய உதவவும், ஆன்லைன் வர்த்தக சேவையை கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

இணையதளத்தை பயன்படுத்தி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வேளாண் சார்ந்த பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். முதல் கட்டமாக, 15 வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் அறிமுகப்படுத்தப்படும். மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்களும் விற்பனை மேற்கொள்ள உள்ளது.

இணையதளம் வாயிலாக....

இந்த இணையதளம் வாயிலாக, நெல், மக்காச்சோளம், பயறு வகை, எண்ணெய் வித்து, பயிர் பூஸ்டர்கள், இடு பொருட்கள், காய்கறி விதைகளை ஆர்டர் செய்து உரிய கட்டணம் செலுத்தி வீட்டு முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைக்க வேண்டுமானால், நல்ல தரமான விதைகளின் பயன்பாடு முக்கியம்.

உற்பத்தி செய்து, இருப்பில் விற்பனைக்கு தயாரான தரமான விதைகளை விவசாயிகள் வாங்குவதற்கு வசதியாக மேற்குறிப்பிட்ட தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக முகவரியில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story