செல்போனில் கியூ.ஆர். கோடு மூலம் ஸ்கேன் செய்து மாமல்லபுரம் புராதன சின்ன வரலாற்று தகவல்களை ஒலி வடிவில் கேட்டு மகிழலாம் - தொல்லியல் துறை ஏற்பாடு


செல்போனில் கியூ.ஆர். கோடு மூலம் ஸ்கேன் செய்து மாமல்லபுரம் புராதன சின்ன வரலாற்று தகவல்களை ஒலி வடிவில் கேட்டு மகிழலாம் - தொல்லியல் துறை ஏற்பாடு
x

செல்போனில் கியூ.ஆர். கோடு மூலம் ஸ்கேன் செய்து மாமல்லபுரம் புராதன சின்ன வரலாற்று தகவல்களை ஒலி வடிவில் கேட்டு மகிழ தொல்லியல் துறை ஏற்பாடு செய்துள்ளது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் யுனெஸ்கோவால் அங்ககீகரிக்கப்பட்ட கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட பாரம்பரிய புராதன சிற்பங்கள் உள்ளது. இவற்றை காண ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

இங்குள்ள ஒவ்வொரு சிற்பத்தின் வகை, அது உருவாக்கப்பட்ட ஆண்டு, வடிவமைத்த பல்லவ மன்னர்களின் பெயர் உள்ளிட்ட முழு விவரங்கள் குறித்து பல ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்த பயணிகள் அறிய ஆர்வமின்றி கடந்து சென்றனர்.

மாமல்லபுரத்தில் சுற்றுலா வழிகாட்டிகள் வந்த பிறகு அவர்களுக்கு கட்டணம் அளித்து, சிற்பங்களின் வரலாற்று தகவல்கள், சிற்பங்களின் தனித்தன்மைகள் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்கின்றனர்.

கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி - சீன அதிபர் ஜின்பிங், இங்கு சந்திப்பு நடந்ததை தொடர்ந்து சர்வதேச பயணிகளின் பார்வை மாமல்லபுரம் பக்கம் திரும்பியது. அவர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. தற்போது, ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள், பிப்ரவரி 1-ந்தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வர இருக்கின்றனர். இந்த சூழலில் மாமல்லபுரம் புராதன சிற்ப பகுதிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மாமல்லபுரம் பல்லவர் குடைவரை கோவில்கள், குடைவரை மண்டபங்கள், ஒற்றைக்கல் ரத சிற்பங்கள் குறித்து ஒலி வடிவத்தில் விளக்க தகவல்களை பெறவும் தற்போது தொல்லியல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சிற்பத்தின் அருகிலும், அதன் வரலாறு, அதன் தனித்தன்மை, அது உருவாக்கப்பட்டதின் பின்னணி குறித்த தகவல்களை பெறும் வகையில் பிரத்யேக கியூ.ஆர். கோடு பலகையை தொல்லியல் துறை அமைத்துள்ளது.

இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறியதாவது:-

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சிற்பங்களை காண்பதாக மட்டுமே இருக்கக் கூடாது. அந்தந்த சிற்பங்கள் பற்றி அறிந்து கொண்டால் மட்டுமே, அவற்றின் சிறப்புகளை முழுமையாக உணர்ந்து கொண்டு ரசிக்க முடியும். தொல்லியல் துறையின் புதுடெல்லி தலைமையகம், ஒலி வடிவ விளக்கத்திற்கான கியூ.ஆர். கோடு தொழில் நுட்பத்தை உருவாக்கி, நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கியூ.ஆர் போடை தங்கள் மொபைல் போனில் ஸ்கேன் செய்து, அவரவர் விரும்பும் மொழியில் சிற்பங்கள் குறித்தான தகவல்களை இனி அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு. அவர்கள் கூறினர்.


Next Story